மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் எப்போது...?

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:44 IST)
சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் முக்கிய நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.


மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயில். கோயில் மட்டுமல்ல, அங்கு நடைபெறக்கூடிய சித்திரைத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.

மதுரை ஆளும் மீனாட்சி அம்மனுக்கு இன்று சுபகிருது புத்தாண்டு தொடங்கக்கூடிய சித்திரை 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறும்.

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 14.04.2022 காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுத் தேர்வு கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 7 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.

மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்