கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்; எங்கு தெரியுமா...?

Webdunia
கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம் நடந்துவருகிறது.
தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது. பண்டைய காலம் தொட்டே இந்தியர்கள் கட்டிடக் கலையில் சிறந்தவர்களாக இருந்திருப்பதை இந்தக் கோவில்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக  திகழ்கிறது.
 
பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது. விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும்  ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத  புதிராகவே விளங்குகிறது. ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு போல் இடையில் இருக்க  வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின்  உச்சமாகும்.
 
கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும். இல்லை இது கட்டடக்கலையின் நுட்பம் என்று  அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய  முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும். படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த  கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்