200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (07:46 IST)
லஞ்சப் புகாரில் சிக்கிய சென்னை அரசு கண் மருத்துவமனை இயக்குநர் ஸ்ரீதர் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் மருத்துவர் ஸ்ரீதர், இவர் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி ஒருவர் கண்பார்வை சான்றிதழ் வேண்டி மருத்துவர் ஸ்ரீதரை அணுகியுள்ளார். அதற்காக அவர் அந்த மாற்றுத்திறனாளியிடம் 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் பேரில் மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் மனமுடைந்த அவர், பொன்னேரியிலுள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்