சிம்புவை நம்பி தடியடி தாக்குதலுக்கு உள்ளான பரிதாப இளைஞர்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (17:11 IST)
தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொண்டால் இராணுவ வீரர்கள் போராட்டக்காரரகளை தாக்க மாட்டார்கள் என்று கூறியதை நம்பி தேசியக் கொடியை போர்த்தியிருந்த இளைஞரை காவல்துறையினர் தாக்கியது சோகத்தி ஏற்படுத்தி உள்ளது.


 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அவர்கள் குரல் கொடுத்து வந்தார். இடையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.

அப்போது பேசிய சிம்பு, ”தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் எப்படி நம்மீது கை வைப்பார்கள் என்று பார்ப்போம். தேசிய கொடி நம் மேல் இருந்தால் அவர்களால் அடிக்க முடியுமா?” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தாக்க வந்தனர். உடனே அவர், தனது உடலில் தேசியக்கொடியை அணிந்துள்ளார். ஆனால், அவரையும் காவலர்கள் கொடுமையாக தாக்கி உள்ளனர். தேசியக்கொடியை பயன்படுத்தியும் தான் தாக்கப்பட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்