லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

Prasanth Karthick

ஞாயிறு, 25 மே 2025 (13:57 IST)

கர்நாடகாவில் இளம்பெண்ணுக்கு லிப்ட் தருவதாக சொல்லி பூசாரி வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள மெகாலி கிராமத்தில் லோஜேஸ்வரா மகராஜ் என்பவர் ராமர் கோவில் பூசாரியாக பணி செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் காரில் சென்றபோது அந்த வழியாக 17 வயது இளம்பெண் ஒருவர் சென்றுக் கொண்டிருந்துள்ளார். 

 

அந்த பெண்ணுக்கு லிப்ட் தருவதாக சொல்லி காரில் ஏற்றிய பூசாரி ராய்ச்சூரில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து பாஹல்கோட் சென்றவர் அங்கு மீண்டும் ஒரு விடுதியில் வைத்து இளம்பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு பெலகாவியில் உள்ள பேருந்து நிலையத்தி விட்டுவிட்டு சென்றுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டிற்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்