அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

Siva

வியாழன், 22 மே 2025 (08:07 IST)
கடந்த சில நாட்களாக பெங்களூரில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் புகுந்து, மக்கள் தத்தளித்தனர். குறிப்பாக, அண்டர் கிரவுண்டில் பெரும்பாலான கட்டிடங்களில் பார்க்கிங் தகுதி வைக்கப்பட்டிருந்ததால் ஏராளமான கார்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதுமட்டுமின்றி, அண்டர் கிரவுண்டில் இருந்த மின்சார உபயோக உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. இதனால், ஒரு கட்டிடத்தில் மின்கசிவு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார், இனிமேல் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் வைப்பது தடை செய்யப்படும் என்றும், பார்க்கிங் பகுதியை முதல் மாடியில் வைக்க உத்தரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
இதற்கான உரிய மசோதா தயாரிக்கப்பட்டு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் மற்றும் மின் உபகரணங்களை வைப்பதால் மழைக்காலங்களில் ஏற்கனவே சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலத்திலும் இத்தகைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, வருங்காலத்தில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, அனைத்து கட்டிடங்களிலும் பார்க்கிங் பகுதியை முதல் மாடிக்கு மாற்ற அறிவுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்பதைக் காலமே தீர்மானிக்க வேண்டும்.
 
 Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்