சிறுமி கற்பழிப்பை தடுத்த இளைஞர் சுட்டுக்கொலை : பகீர் சம்பவம்

Webdunia
வியாழன், 2 மே 2019 (16:23 IST)
ஒகேனக்கல் காட்டுப்பகுயில் சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபரை வேட்டைக்காரன் ஒருவன் சுட்டுக்கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம்  ஜருகு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாலு. இவரது மகன் முனிசாமி(25). டிப்ளமொ படித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். 
 
இந்நிலையில் கடந்த வாரம் தனது அக்காள் மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஒகேனக்கல் சென்றதாகத் தெரிகிறது. அவர்கள் ஒகேனக்கலில் இருந்து 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள பண்ணப்பட்டியில் ரோட்டோரமாய் இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு ஆள் அரவமற்ற வனப்பகுதியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். 
 
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒருவர் சிறுமியை பலவந்தமாகக் கையைப்பிடித்து கற்பழிக்க முயற்சிசெய்துள்ளார். இதனால் பதறிய முனிசாமி சிறுமியைக் காப்பாற்ற முயற்சிமேற்கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த ந்பர் தனது துப்பாக்கியால் முனிசாமியை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே முனிசாமி பறிதாபமாக உயிரிழந்தார்.
இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி பயந்தபடி அங்கிருந்து ஓடிச்சென்று சாலையில் நின்று கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த சுற்றுலா பயணிகள் சிறுமியை பாதுக்காப்புடம் மீட்டனர். பின்னர் இதுகுறித்து போலீஸாருக்குச் தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியை விசாரித்தனர். அப்போது முனிசாமியை சுட்டது வேட்டைக்காரர் போன்று ஒருவர் சுட்டதாகத் தெரிவித்தார்.அதனடிப்படையில் போலீஸார் தீவிரமாக குற்ற்வாளியைத் தேடினர்.
 
அதன் பின்னர் குற்றவாளி பண்ணப்பட்டி கிராமத்தில் வசுக்கும் செல்வமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். போலீஸார் செல்வம் வீட்டிற்கு சென்று தேடிய போது அவரைக் காணவில்லை. ஏற்கனவே செல்வத்தை போலீஸார் தேடிவந்த நிலையில்  அவர்தான் முனிசாமியை கொலைசெய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்