கல்லூரி மாணவி மிரட்டி கற்பழிப்பு ; நண்பனுக்கும் விருந்தாக்கிய காதலன் : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (11:29 IST)
சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததோடு, தனது நண்பருக்கும் அப்பெண்ணை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கு, 4 வருடத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மோனி என்பவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, பேஸ்புக்கில் அவர்கள் இருவரும் காதலை பரிமாறி வந்தனர். 
 
அந்நிலையில், அப்பெண்ணை மோனி மிரட்டத் தொடங்கியுள்ளார். பேஸ்புக்கில் தன்னுடன் பேசிய தகவல்களை அப்பெண்ணின் தந்தையிடம் காட்டாமல் இருக்க தன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
 
வேறு வழியின்றி, பயந்து போன அப்பெண் பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் மோனியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வதாக மோனி வாக்குறுதி அளித்தார். இதனால், மோனியின் இச்சைக்கு அப்பெண் சம்மதித்துள்ளார். இவ்வாறு, பலுமுறை அந்த லாட்ஜிக்கு அப்பெண்ணை வரவழைத்து மோனி பயன்படுத்திக்கொண்டார்.
 
மேலும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது, அப்பெண்ணிற்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி, அப்பெண்ணிடம் பணம் கறக்கத்தொடங்கியுள்ளார். அவரிடம் ரூ1.5 லட்சம் வரை கறந்துவிட்டதாக தெரிகிறது.
 
அதுபோதாது என, வியாசர்பாடியை சேர்ந்த தனது நண்பர் ரவீந்திரகுமார் சர்மா(23)விற்கும் அப்பெண்ணை மிரட்டி விருந்தாக்கினார். அதன்பின், சர்மாவும் அப்பெண்ணை அந்த லாட்ஜிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இப்படி 4 வருடம் அவர்கள் இருவரும் அப்பெண்னை நாசம் செய்து வந்தனர். இதில், அப்பெண்ணை திருமணம் செய்வதாக சர்மா வாக்குறுதியும் அளித்தார். ஆனால், சர்மா திருமணமானவர் என்பது அப்பெண்ணிற்கு தெரியவந்தது. மேலும், ரூ.5 லட்சம் கேட்டு அப்பெண்னை இருவரும் மிரட்டியுள்ளனர்.
 
இதையடுத்து, அப்பெண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தெரிந்ததும், மோனி தலைமறைவாகிவிட்டார். ரவீந்திரகுமார் சர்மாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மோனியிடம் இருப்பதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்