கோவை பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படுகிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி

செவ்வாய், 21 நவம்பர் 2017 (08:01 IST)
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில் மூடப்பட்டு அது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைக்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.





சமீபத்தில் கோவையில் இயங்கிவரும், அச்சகத்தை மூடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தையும் மூடவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் அந்நகர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை பாஸ்போர்ட் அலுவலக கட்டிடம் ரூ.3 லட்சம் வாடகையில் இயங்குவதாகவும், இங்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்பதாலும் இந்த அலுவலகம் மூடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகம் மூடப்பட்டால் கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு சென்றுதான் பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்