கைதுக்குப் பின்னும் போராடும் யமஹா தொழிலாளர்கள்

புதன், 3 அக்டோபர் 2018 (13:15 IST)
பல்வேறுக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட யமஹா தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் இயங்கி வருகிறது யமஹா மோட்டார்பைக் தொழிற்சாலை. அங்கு தொழிலாளர் சங்கம் அமைப்பது மற்றும் தொழிலாளர்களின் இன்ன பிற பிரச்ச்னைகளுக்குப் பேசிய ராஜ மணிகண்டன் மற்றும் பிரகாஷ் என்ற இரண்டு தொழிலாளர்களை அந்நிறுவனம் வேலை நீக்கம் செய்தது.

இதனையடுத்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியூ சங்கத்தோடு சேர்ந்து தொழிற்சாலைக்கு வெளியே போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஒரு வார காலமாக அறவழியில் போராடி வந்த அவர்களை காஞ்சிபுரம் காவல் துறையினர் கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் அந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துப் போராடி வருகின்றனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு சேர்க்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சிபிஎம் உள்ளிட்ட அர்சியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்