சென்னை டீக்கடையில் தீவிபத்து - பரபரப்பு

புதன், 3 அக்டோபர் 2018 (12:16 IST)
சென்னை கிண்டியில் உள்ள உணவகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து.

கிண்டி பைபாஸ் சாலையில் ஒரு உணவகத்திறகு முன்பு சாலைக்கு அருகில் பெட்டிக்கடை போன்ற ஒரு டீக்கடை இருந்து வந்துள்ளது. அந்த கடையில் பயன்படுத்தப்பட்டு வந்த கேஸ் சிலிண்டரில் வாயுக் கசிவு ஏறபட்டதை அடுத்து சிலிண்டர் வெடித்து கடை முழுவதும் தீப்பரவத் தொடங்கியது.

கடை சாலைக்கருகில் இருந்ததால் சாலையில் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து பதற்றமடைந்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒருமணிநேர போராட்டத்திறகுப் பிறகு தீயை அணைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டு பரபரப்பானது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்