முதல்வர் வார்த்தைகளில் கற்பனை கலக்கலாமா? பெண் எழுத்தாளர் கேள்வி!

திங்கள், 17 ஜனவரி 2022 (13:07 IST)
முதல்வர் வார்த்தைகளில் கற்பனை கலக்கலாமா? பெண் எழுத்தாளர் கேள்வி!
முதல்வரின் வார்த்தைகளில் கற்பனை கலக்கலாமா என பெண் எழுத்தாளர் வெண்ணிலா என்பவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு ஜான் பென்னிகுக் அவர்கள் தனது சொந்த ஊரில் இருந்த சொத்துக்களை விற்று கட்டி முடித்தார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இது குறித்து எழுத்தாளர் வெண்ணிலா அவர்கள் கூறியபோது பென்னிகுவிக் தனது சொத்துக்களை விற்று அணை கட்டினார் என்பது கற்பனையான ஒன்று என்றும் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு நிதி கொடுக்கவில்லை என்றால் அந்த அணை கட்டி முடிக்க முடியாது என்றும் பிரிட்டிஷ் இந்திய கவர்னர் உத்தரவை மீறி பென்னிகுவிக் அந்த அணையை தனது சொந்த பணத்தில் கட்டியிருக்க முடியாது என்றும் அணைகட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு ஆதாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சில கற்பனைகள் இதமானவை இனியவை கலக்க கூடாதவை. ஆனால் எளிய மக்களின் வாய் வார்த்தைகள் வரை அவற்றை ரசிக்கலாம். முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம், அதுவே எதிர்கால உண்மையாகிவிடும் என எழுத்தாளர் வெண்ணிலா குறிப்பிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்