தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வுகள் ஒத்திவைப்பு! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

திங்கள், 17 ஜனவரி 2022 (12:38 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நேற்று 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அறிவித்து வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்திவைப்பதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்