கொரோனா அச்சம்: சொந்த ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பும் பொதுமக்கள்!

திங்கள், 17 ஜனவரி 2022 (13:04 IST)
கொரோனா அச்சம் காரணமாக பொங்கல் திருவிழா கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் பேருந்து மற்றும் ரயில்களைப் பயன்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் சென்னை திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் ஏராளமானோர் தற்போது சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்பதும், மேலும் சென்னை திரும்புபவர்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் திரும்பி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ரயில்கள் மற்றும் பேருந்துகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்றும் என்ற அச்சமும் பலரிடம் இருந்து வருகிறது
 
இந்த நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு பலர் திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுங்கச்சாவடிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வதில் இருந்த இது உறுதியாகி உள்ளது என்று தெரியவருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்