உலகம் முழுவதும் ஸ்க்ராப் (கழுத்துத் துண்டு) தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சாரணியர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த ஸ்க்ராப் (கழுத்துத் துண்டு) தினத்தில் ஏதேனும் ஒரு நற்செயலை செய்யும் பொருட்டு கரூர் பரணி பார்க் சாரணிய மாவட்ட மாணவர்கள் தீர்மானம் மேற்கொண்டனர்.
அதனையடுத்து, மாணவர்களும், கரூர் பரணி பார்க் சாரணர் இயக்க ஆணையரும், பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினருமான முனைவர் ராம.சுப்பிரமணியன், students for soldiers என்ற தேசிய அளவில் நடைபெறும் இந்த நாளில் ராணுவ வீரர்களுக்கு ராக்கி செய்தும், பூக்களை அனுப்பி அவர்களை மகிழ்விக்க முடிவெடுத்தனர்.
அதன் பொருட்டு 5 ஆயிரம் மாணவிகள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கிகளை தயார் செய்து இதனை Students For Soldiers தேசிய தலைவர் தருண் விஜய் அவர்களுக்கு அனுப்பி, அவர் மூலமாக இந்திய ராணுவ வீரர்களுக்கு சிக்கிம், பஞ்சாப், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாட்டை காக்கும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அனுப்பும் முதற் முயற்சியை கரூர் பரணி பார்க் என்ற தனியார் பள்ளி முயற்சித்துள்ளது.
உலகளவில் இதுவே முதல் முறையாகும், மேலும் இதே பள்ளி கடந்த வருடம் அதே ராணுவ வீரர்களுக்கு அன்பு கலந்த கடிதங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் சாரணிய இயக்கத்தின் தேசிய தலைவர் அணில் ஜெயின், மாநில தலைமையக ஆணையர் முனைவர் தர்ம ராஜேந்திரன் ஆகியோர் வழியில் நடத்தப்பட்ட இந்த விழாவில் தினந்தோறும் எல்லையை காக்கும் ராணுவ வீரர்கள், ஒரு சில விஷமிகளால் கற்களால் தாக்கப்பட்டனர் என்று சமூக வலைதளங்களிலும் செய்தி பரவும் நேரத்தில் எல்லையை காக்கும் வீரர்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்றும், இந்தியாவில் உள்ள இந்தியரும், சிறுவர், சிறுமியர்களும் தங்களது அன்பையும் பண்பையும் போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வு ஆனது ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கரூர் பரணி பார்க் பள்ளியில் சுமார் 20 நிமிடங்களில் ஒரு ராக்கி என்கின்ற விகிதத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் உருவாக்கப்பட்ட இந்த 15 ஆயிரம் மேற்பட்ட ராக்கிகள் காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு மாலை வரை நடைபெற்றது
இந்த ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கிகளை மாணவிகள் கையில் தயார் செய்து ராணுவ வீரர்களுக்கு அன்பு கலந்து அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வு இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்தது. மேலும் ஒய்வு பெற்ற விமானப்படையை சார்ந்த வீரரின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேட்டி : 1) முனைவர் ராமசுப்பிரமணியன் – சாரணிய இயக்க மாவட்ட ஆணையர்