குண்டுமழை பொழியும் ரஷ்யா; உக்ரைனுக்குள் உலக தலைவர்கள்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (09:01 IST)
உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் உலக தலைவர்கள் சிலர் உக்ரைனுக்குள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களை தாண்டியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. முக்கியமாக தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா தாக்கி வரும் நிலையில் கிவ்வில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

உக்ரைனில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த போலந்து, செக் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போலந்து பிரதமர் மடேஸ் மொராவில்கி இதை தனது பேஸ்புக்கில் உறுதி படுத்தியுள்ளார். போர் நடக்கும் பகுதிக்குள் உலக நாட்டு தலைவர்கள் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்