உக்ரைன் பள்ளி மீது ரஷ்யா தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

புதன், 16 மார்ச் 2022 (08:13 IST)
கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் செய்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நள்ளிரவு திடீரென தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளிக்கூடம் இடிந்து தரைமட்டமானது
 
இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் மீட்பு சேவை மையம் தெரிவித்துள்ளது
 
உக்ரைன் பள்ளியில் நடத்திய தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்