பெண்கள் உயர்கல்வி உறுதித் திட்டம்...முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திங்கள், 21 மார்ச் 2022 (20:51 IST)
பெண்கள் உயர்கல்வி உறுதித் திட்டம் மூலம் ஆண்டிற்கு   சுமார்  6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமண உதவித்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது குறித்தது, தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: பெண்களுக்கு கவ்லிதான் நிரந்தரச் சொத்து என்பதால் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர் கல்வித்திட்டத்திற்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாலிக்குத் தங்கம் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மாற்ஆக உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க்கபடும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்