திமுக பிரமுகருக்கு ஒரே வெட்டு..! மாயமான லோக்கல் ரௌடி லோகம்மாள்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (10:57 IST)
சென்னையில் திமுக பிரமுகரை வெட்டி கொன்று விட்டு பெண் ரௌடி தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தாம்பரம் அருகேயுள்ள எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். திமுக கட்சி பிரமுகரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லோகம்மாள் என்ற பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. லோகம்மாள் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ: 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை: எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்நிலையில் நேற்று மாலை சதீஷுக்கும், லோகம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகம்மாள் சதீஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரௌடி லோகம்மாளை தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்