ஒரு நாள் சதாசிவத்திடம் பேசிய அவர்கள் தாங்கள் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாகவும், மீத நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் ஒருநாள் அப்படி கூலி வேலை சென்ற இடத்தில் நிலத்தை தோண்டியபோது புதையல் ஒன்று கிடைத்தது. அதில் சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் உள்ளது. அதை உரிமையாளருக்கு தெரியாமல் கொண்டு வந்துவிட்டோம்.
அதன் மதிப்பு பல லட்சம் மதிப்பு போகும், ஆனால் நீங்கள் ரூ.10 லட்சம் தந்தால் உங்களிடமே மொத்த புதையலையும் கொடுத்து விடுகிறோம் என்று இனிக்க பேசியுள்ளனர். மளிகைக்கடைக்காரர் ஆதாரம் கேட்க தாங்கள் வைத்திருந்த செயினின் ஒரு பகுதியை கழற்றி கொடுத்துள்ளனர். அதை அவர் ஆராய்ந்ததில் உண்மையான தங்கம் என தெரிந்துள்ளது.