அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை குடும்பத்துடன் பாதயாத்திரையாக மரக்கன்றுகளை நட்டு,பசுமை விழிப்புணர்வை வந்த பெண்!

J.Durai
வியாழன், 7 மார்ச் 2024 (13:34 IST)
உத்திரபிரதேசம் மாநிலம், அயோத்தி நகரைச் சேர்ந்தவர் சிப்ரா பதக் என்ற பெண்மணி. கடந்த சில மாதங்களுக்கு அயோத்தியில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்ட அவரும், அவரது குடும்பத்தினரும் இதுவரை 4000 கி.மீ. தூரம் நடந்து இன்று மதுரை வந்தடைந்தனர். 
 
வருகின்ற வழியில், குறுக்கிடும் நதிக் கரைகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும், உரிய இடங்களைக் கண்டறிந்து இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டி உள்ளதாகவும், கன்றுகளைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம் காட்டிய தன்னார்வலர்கள் சுட்டிக் காட்டிய, பாதுகாப்பான இடங்களில் மரக்கன்றுகளை நட்டியதாகவும், ராமேஸ்வரம் சென்றடையும் வரை இன்னும் 2 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
இவரது நோக்கத்தை அறிந்த, மதுரை கோச்சடைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகனத்தினர், தனது பள்ளிக்கு அவரை வரவேற்று மரக்கன்றுகளை நடச் செய்து சிறப்பு செய்தனர். 
 
இந்நிகழ்ச்சியில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் கலந்து கொண்டார்.
 
 நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமதி. சிப்ரா பதக் கூறுகையில், 
 
தண்ணீரைத் தேவையில்லாமல், சிக்கனமின்றிப் பயன்படுத்தினால், தண்ணீர்க்காக உலகம் 3 ஆம் உலகப் போரை சந்திக்க வேண்டியதிருக்கும்.
 
நதிகள், மலைகள் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும், அவற்றின் மரபு மாறாமல் பேணிக்காப்பதும் முக்கியம்.
 
தனது பாதயாத்திரையின் நோக்கமே நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பு உள்ளிட்ட பஞ்சப்பூதங்களை உலக சமுதாயம் போற்றிப் பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்றார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்