கேரளாவில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம், இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு பெண்ணின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையை திருடிச் சென்ற திருடன், அது திருமண நகை என்று தெரிந்ததும், அதை மீண்டும் திருடிய இடத்திலேயே திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளான். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கேரளாவின் கீதா என்பவர் தன்னுடைய திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடுபோனதாக காவல் துறையிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் தகவல் அளித்திருந்தார். இந்த தகவல் திருடிய நபரின் கவனத்திற்கு சென்றுள்ளது. ஒரு பெண்ணின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையை தான் திருடிவிட்டோம் என்றும், தன்னால் அந்தப் பெண்ணின் திருமணம் நின்று போகக்கூடாது என்றும் நினைத்த அந்தத் திருடன், கீதா தங்கியிருந்த இடத்திலேயே, திருடிய நகையை வைத்துவிட்டு சென்றான்.
நகையுடன், அதில் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அந்தத் திருடன் வைத்திருந்தான். தன்னால் ஒரு திருமணம் நிற்கக் கூடாது என்று நினைத்து, திருடிய நகையை திருப்பி கொடுத்த அந்தத் திருடனின் செயலை அறிந்த நெட்டிசன்கள், "திருடனாக இருந்தாலும் நல்ல திருடனாக இருக்கிறானே" என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.