ரவுடியை கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:44 IST)
வேலூரிலுள்ள சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவர் வேலூரில் பிரபல ரவுடியான ராஜாவின் நெருங்கிய நண்பன் என்று கூறப்படுகிறது.
இவர் மீது காவல்நிலையத்தில் கொலை, கொள்ளை , வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் தண்டுமாரி(39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
 
இப்படியிருக்க கடந்த 17 ஆம்தேதி அன்று தண்டுமாரிக்கும் தங்கராஜுக்கும் தகராறு எற்பட தண்டுமாரியின் மகன், அவது தங்கை ஆகிய மூவரும் தங்கராஜை கொன்று விட்டு ஊரைவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டனர்.
 
பின் இரண்டு நாட்களூக்குப் பிறகு தண்டுமாரி காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார். இந்நிலையில் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டநிலையில் போலீஸார் அவரிடம் தங்கராஜை கொன்றதற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆனாலும் தண்டுமாரியின் மகன் மற்றும் தங்கை இருக்கும் இடம் இதுவரை போலீஸாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
 
இந்நிலையில் இருவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்