திருவண்ணாமலையை அடுத்த வேடநத்தம் பகுதியை செகண்ணன் பூங்காவனம் தம்பதிகள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய 5 ஏக்கர் நிலத்தை தங்களது மகன்களான பழனி, மற்றும் செல்வம் ஆகியோருக்கு பகிர்ந்து அழங்கியுள்ளனர்.
நிலங்களை பெற்றுக்கொண்ட மகன்கள் அவர்களுக்கு சாப்பாடு கூட போடாமல் அவர்களை கொடுமைபடுத்தி வந்துள்ளனர். இதனால் வேதனையடைந்த கண்ணன், தனது மகன்களிடம் சென்று நிலத்தில் ஒரு பகுதியை தந்தால் தாங்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என கேட்டுள்ளார்.
இதனையடுத்து கண்ணன் பூங்காவனம் தம்பதியினர் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் முறையிட்டார். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், அவர்களின் மொத்த நிலத்தையும் கண்ணன் - பூங்காவனம் பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்த நடவடிக்கை பெற்றோரை கவனிக்க தவறிய அனைத்து பிள்ளைகளுக்கும் பாடமாக இருக்கும் என கூறினார். இவரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.