கேப்டன் சொல்லட்டும்... அப்பாவின் வார்த்தைக்காக காத்திருக்கும் மகன்

வியாழன், 15 நவம்பர் 2018 (16:18 IST)
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜய்காந்த் உடல்நலம் குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுப்படாமல் உள்ளார். சமீபத்தில்டான் அவரது மனைவி பிரேமலதா விஜய்காந்திற்கு கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்துக்கொண்டார். அவருக்கு செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது பின்வருமாறு, தேமுதிக தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.
 
இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர், நான் அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடிவெடுத்துள்ளேன். எனது தந்தை சென்ற வழியில்தான் நானும் செல்வேன். இளைஞர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றினால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்