மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முன்னணி தலைவருமான அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அமித்ஷாவின் வருகை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது
அமித்ஷாவின் வருகையின் போது அவர் ரஜினியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர்களிடம் கூட்டணி குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்ற வியூகங்களை அவர் அமைத்துக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி, அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் பாஜகவில் இணைய போவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரை உள்பட தென் மாநிலங்களில் பெரும் செல்வாக்காக இருக்கும் அழகிரி, பாஜகவில் இணைந்தால் திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்