பீகாரும் தமிழகமும் ஒன்னா? செலவு பண்ண பைசா இல்ல... அழகிரி ஆதங்கம்!
திங்கள், 16 நவம்பர் 2020 (11:42 IST)
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பீகார் தேர்தலும் தமிழக தேர்தலும் ஒன்றில்லை என விளக்கியுள்ளார்.
தனது சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 12,700. இந்தியாவில் இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஒரு ஆட்சி அமைந்தது கிடையாது.
கூட்டணியில் எந்த கட்சி அதிகமாக பெற்று இருக்கிறது. குறைவாக பெற்று இருக்கிறது என்று பார்ப்பதில்லை. கூட்டணியில் எவ்வளவு இடங்களை பெற்று இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும். பீகாரில் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
பீகாரில் அமைச்சர்கள் போட்டியிட்ட இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பீகார் அமைச்சர்கள் அதிக செல்வு செய்தனர். அதற்கு காங்கிரஸ் கட்சியால் ஈடு கொடுக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பணம் இல்லை.
பீகார் மாநிலத்தை வைத்து மற்றொரு மாநிலத்திலும் அப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களில் 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதை தான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
பாட்டிக்காலத்தில் என்ன நடந்தது என்பதை கணக்கில் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் கட்சி உள்ள கூட்டணி வெற்றி பெற கூடிய கூட்டணி என பேசியுள்ளார்.