எடப்பாடி முதல்வராக நீடிப்பாரா?: என்ன சொல்கிறார் ஓபிஎஸ்?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (16:20 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது அதிமுக அம்மா அணி.


 
 
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பாரா அல்லது மீண்டும் ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்பாரா என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் எழுகிறது.
 
இந்நிலையில் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து விலக வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை போக்க விசாரணை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தான் இரு அணிகளும் ஒன்றாக இணைய முடியும் என கூறினார்.
 
அப்போது அவரிடம் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால் எடப்பாடி பழனிச்சமி முதலமைச்சராக நீடிப்பாரா என நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் நடக்காததை பேச வேண்டாம் என்றார்.
 
மேலும் ஓபிஎஸ் தர்ப்பில் இருந்து முதலமைச்சர் பதவி மற்றும் 6 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஓபிஎஸ் முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் இது தான் ஓபிஎஸ் அணியின் பிளான் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்