கணவன் முன்னிலையிலே பரிதாபமாக உயிரிழந்த மனைவி மற்றும் மகள்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (09:18 IST)
விக்கிரவாண்டி அருகே இரு சக்கர வாகன விபத்தில் கணவன் முன்னிலையிலேயே மனைவி மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வீராட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (35). இவரது மனைவி சாவித்திரி (27). இவர்களுக்கு மெரிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது.  ராஜீவ்காந்தி தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் மயிலம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி தரிசனம் செய்து விட்டு வீராட்டிகுப்பத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது ராஜீவ்காந்தியின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது. விபத்தில் சாவித்திரி, மெரிஷா ஆகிய 2 பேரும் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ராஜீவ்காந்தி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த ராஜீவ்காந்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்