கஸ்தூரியை மட்டும் இவ்வளவு தூரம் வன்மம், வன்மமாக கைது செய்தது ஏன்? பிரேமலதா

Siva
புதன், 20 நவம்பர் 2024 (13:02 IST)
கஸ்தூரி பேசியது தவறுதான் என்றாலும், அவரை இவ்வளவு தூரம் வன்மம், வன்மமாக கைது செய்தது ஏன் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல், கஸ்தூரி தனது பேச்சால் மாட்டிக் கொண்டார்கள். பேசத் தெரியாமல் பேசி சிக்கலில் மாட்டி விட்டார் என்றாலும், அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

ஆனால் எத்தனையோ தலைவர்கள் என்னென்னவோ பேசி இருக்கும் போது, அவர்களை எல்லாம் கைது செய்யாத இந்த அரசு, கஸ்தூரியை மட்டும் இவ்வளவு தூரம் வன்மம்,  வன்மமாக  கைது செய்தது ஏன் என்று தெரியவில்லை. அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். அதன் பின்னரும் ஹைதராபாத் என்று அவரை கைது செய்து கொண்டு வந்திருக்கின்றனர்.

அவர் மீது கடுமையான சட்டம் பாய்ந்திருக்கிறது. ஒரு பெண்ணாக கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம் என்பதை பதிவு செய்கிறேன். அவர் வெளியே வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. காலம் வரும்போது எங்களது முடிவை தக்க நேரத்தில் தெரிவிப்போம்," என்று பிரேமலதா கூறியுள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்