ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அவரை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும் ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்க தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகிய இருவரும் டிசம்பர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அவதூறு வீடியோக்களை வெளியிடும் நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது