வேட்பாளர்கள் யார்? தொகுதி பங்கீடு எப்படி? நாளை அதிமுக தேர்தல் குழு முக்கிய ஆலோசனை!

Prasanth Karthick
புதன், 24 ஜனவரி 2024 (12:49 IST)
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக அமைத்துள்ள 4 குழுக்களும் நாளை முக்கிய சந்திப்பை நடத்த உள்ளன.



ஓபிஎஸ்ஸின் உள்கட்சி மோதல், பாஜகவுடனான கூட்டணி முறிவு என தொடர்ந்து பல சிக்கல்களில் சிக்கி வந்த அதிமுக, அதிலிருந்து விடுபட்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கிய தனது இலக்குகளை நிர்ணயித்து வேகமாக முன்னகர்ந்து வருகிறது.

முன்னதாக நடந்த அதிமுக கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 4 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்படி தொகுதி பங்கீடு கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணு, வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான அணி மேற்கொள்கிறது. தேர்தல் பிரச்சார குழு ஏற்பாடுகள் தம்பி துரை தலைமையில் நடக்கிறது.

இந்த 4 குழுக்களும் நாளை அதிமுக தலைமை செயலகத்தில் கூடி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர். பாஜக உள்ளிட்ட எந்த தேசிய கட்சிகளின் கூட்டணியும் இல்லாமல் அதிமுக களம் இறங்க உள்ள இந்த நாடாளுமன்ற தேர்தலானது அதிமுக அரசியலில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்