அவர் நியாயமானவரா? கொதிக்கும் அமைச்சர்; தனி ஆளாய் கெத்துகாட்டும் பொன்.மாணிக்கவேல்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (13:52 IST)
பொன்.மாணிக்கவேல் நியாயமானவரா என சட்டத்திறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல திருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார். ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. 
 
இதற்கிடையே பதவி ஓய்வு பெற்ற அவரை மீண்டும் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது உயர்நீதிமன்றம். ஆனால் இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலுடன் இருந்த போலீஸார்கள் பலர் அவர் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்தார் பொன்.மாணிக்கவேல்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பொன்.மாணிக்கவேல் நியாயமானவரா? சக அதிகாரிகள் அவர் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டை வைக்கும் போதே அவரது லட்சணம் என்ன என தெரிகிறது என காட்டமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்