நிர்மலாதேவி விவகாரத்தில் என்ன நடக்குது தெரியுமா? - கசிந்த தகவல்

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (11:30 IST)
நிர்மலா தேவி விவகாரத்தில் தாங்கள் மாட்டாமல் இருப்பதற்காக சில பெரும்புள்ளிகள் இந்த வழக்கை வேறு பாதையில் கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.

 
கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவியை கடந்த ஏப்ரல் 16ம் தேதி போலீசார் கைது செய்தனர். தமிழக காவல்துறை விசாரித்த வழக்கு அதன்பின் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் அவருக்கு துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் உதவியதாக முதலில் செய்திகள் வெளியானது. அவர்களும் விசாரிக்கப்பட்டார்கள். இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஆளுநர் பன்வாரிலால் அமைத்து, விசாரணை முடிந்து அதன் அறிக்கையும் ஆளுநரிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை எந்த உண்மையும் வெளியாகவில்லை.
 
அதாவது, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார்? யாருக்காக இந்த செயலை நிர்மலா தேவி செய்து வந்தார்? அவர்கள் என்னென்ன பொறுப்பில் இருப்பவர்கள்? என்பது போன்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

 
இந்நிலையில்தான் இந்த விவகாரம் பற்றி ஒரு முக்கிய செய்தி வெளியே கசிந்திருக்கிறது. இந்த விவகாரம் வெளியே பரவி, நிர்மலா தேவியை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, ஒரு நாள் காலை முதல் மாலை வரை வீட்டின் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தார் நிர்மலாதேவி. அப்போது, இதில் தொடர்புடைய முக்கிய பெரும் புள்ளிகள் அனைவரிடமும் செல்போனில் பேசினாராம். அப்போது, தங்களை போலீசாரிடம் மாட்டி விட வேண்டாம் அதாவது தங்கள் பெயரை கூறிவிட வேண்டாம் என அந்த பெரும்புள்ளிகள் அவரிடம் கெஞ்சினார்களாம்.
 
மேலும், எந்த பிரச்சனையும் இல்லாமல் உன்னை வெளியே கொண்டு வருகிறோம். அதற்கு நாங்கள் பொறுப்பு என அவர்கள் வாக்குறுதி அளித்த பின்னரே வீட்டின் கதவை திறந்து போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் நிர்மலா தேவி. 
 
தன் மீது நடவடிக்கை பாய்ந்தால் இந்த விவகாரத்தில் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்பதை போலீசாரிடம் கூறிவிடுவார் என்பதால் அதற்கு பயந்து தன்னை எப்படியும் அவர்கள் வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தைரியமாக இருக்கிறாராம் நிர்மலா தேவி. 
 
இந்த விவகாரம் வாட்ஸ்-அப்பில் வெளியான உடனேயே, அதில் பேசியது நான்தான் என நிர்மலா தேவியே ஒத்துக்கொண்ட வீடியோவும் வெளியானது. ஆனால், அது நடந்து 100 நாட்களுக்கு பின் அவரின் குரல் சோதனையை போலீசார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்