மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரம்: நிர்மலா தேவிக்கு குரல் பரிசோதனை

புதன், 27 ஜூன் 2018 (15:39 IST)
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு நாளை சென்னையில் குரல் பரிசோதனை நடக்கவுள்ளது.
 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளது என்று பலரும் தெரிவித்து வந்தனர். ஆளுநர் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார்.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவின் உண்மை நிலை குறித்து கண்டறிய அவருக்கு குரல் பரிசோதனை நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மதுரை நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு வந்தார். நாளை அவருக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் குரல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடக்கவுள்ளது. இதன்பின்னர் அவர் வரும் 29ம் தேதி மதுரை சிறைக்கு திரும்பவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்