முழு ஊரடங்கில் மக்கள் என்ன செய்யலாம் ...செய்யக் கூடாது ! காவல் ஆணையர்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (18:49 IST)
சென்னையில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால்  வரும் 19 ஆம் தேதி முதல் ( நாளை ) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல்  30 ஆம்தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுதப்படவுள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் ஏ,கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..

அவர் கூறியுள்ளதாவது :

சென்னையில் மிகக்கடுமையாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்; அறிவுறை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு வெளியே வேலைக்குச் சென்று வர அனுமதியில்லை.

போலி இ-பாஸ் போடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முகக்கவசம் அணியாமல் வருவார் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த 12 நாட்களில் மக்கள் 2கி.,மி தொலைவுக்குள் மட்டுமே மளிகைக் கடை காய்கறிக் கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.

இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் தொலைதூரங்குச் செல்ல வேண்டாம்; அப்படி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அவசர காரியம், மருத்துவசேவை,  ஆகியவரை தவிர ரயில், விமான நிலையங்களுக்குச் செல்ல ஆட்டொ, டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு மற்ற தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 33% பேர் பணியாற்ற அரசு அனுமதி வழங்கியுள்ளதால் வருவோர் தங்களின் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து வைத்திருக்கும்போது அவை போலீஸார் சோதனை செய்ய வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையில்லாமல் சுற்றித் திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரை விட்டு வெளியே செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமணம் மற்றும் அவசர தேவைக்காக அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை;ஏற்கனவே வாங்கியிருந்தால் அதைப் புதுப்பித்து வாங்க வேண்டும்.

மளிகைக்கடை, காய்கறிக் கடைக்கார்கள் ஹோட்டல் காரர்கள் சரியான நேரத்தைக் கடைபிடிக்க வேண்டும்;. கடைகளில் ஏசி  போடக்கூடாது.

தொற்று நோய்களுக்கான சூழல் எதுவும் தென்பட்டால் கடைகள் மூடப்படுமென எச்சரித்துள்ளார்.

முழு ஊரடங்கில் மக்களைக் கண்காணிக்கும் வகையில் சுமார் 18 ஆயிரம் போலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனவே கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை போலிஸார் முழு கட்டுப்பாடுடன் இந்த முழு ஊரடங்கை கண்காணிக்கவுள்ளனர்.
அதற்கு மக்களுகும் அரசுக்கும் போலீஸாருக்கும் ஒத்துழைப்புக் கொடுத்து வீட்டில் இருந்தால் நோய்தொற்று குறையும் என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்