இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (14:33 IST)
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவ கவுடாவின் பேரனும், ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, தனது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரஜ்வல் ரேவண்ணா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஒரு பெண், 2021-ஆம் ஆண்டு முதல் தன்னை ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
நீதிமன்ற விசாரணை ஜூலை 18-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. அதில், பிரஜ்வல் ரேவண்ணா இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கான தண்டனை விவரங்கள் நாளை  அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்