இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (14:20 IST)
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
முக்கியத் தேதிகள்:
 
வேட்புமனு தாக்கல்: வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 21.
 
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இரண்டும் செப்டம்பர் 9-ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறும்.
 
முன்னதாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்துறை அமைச்சகம் ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியானது உறுதி செய்யப்பட்டது.
 
சட்டத்தின்படி, காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் துணைத் தலைவர், பதவியேற்ற நாளிலிருந்து முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
 
17-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், 1952-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின்படி நடத்தப்படும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்