தேமுதிக தற்போது விஜயகாந்த் பிடியில் இல்லை என்றும், பிரேமலதா-சுதீஷ் பிடியில் இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக விஜயகாந்த் கட்டிக்காத்து வந்த கட்சியின் மரியாதையே நேற்று ஒரே நாளில் சுதீஷ் போக்கிவிட்டார். ஒருசில சீட்டுக்களுக்காக கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் இரண்டு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது நேற்று அம்பலத்திற்கு வந்தது முதல் தேமுதிக மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது
கிட்டத்தட்ட அதிமுக, தேமுதிகவிற்கான கதவை அடைத்துவிட்டது. இனிமேல் ஒருவேளை கூட்டணியில் இணைந்தாலும் தேமுதிகவுக்கு உரிய மரியாதை கூட்டணியிலும் மக்களிடத்திலும் இருக்காது
இந்த நிலையில் தேமுதிகவுக்கு இனி என்னென்ன ஆப்சன்கள் உள்ளது என பார்ப்போம். ஒன்று தனித்து போட்டியிட வேண்டும். அது தற்கொலைக்கு சமம் என்பதால் அந்த முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை
இரண்டாவது கமல், சரத்குமார், சீமான் ஆகியோர்களை இணைத்து ஒரு கூட்டணி அமைக்க வேண்டும். ஆனால் மூவருமே 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டதால் அது சாத்தியமா? என்று தெரியவில்லை. இப்போதைக்கு தேமுதிகவுக்கு உள்ள ஒரே ஆப்சன் தினகரன் மட்டுமே. விஜயகாந்த்-தினகரன் கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்