முதல்வருக்கு வாபஸா? ஆட்சிக்கு வாபஸா?: கவர்னர் சந்திப்பில் தினகரன் அதிரடியா?

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (07:13 IST)
டிடிவி தினகரன் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கவர்னரை சந்திக்கவிருப்பது எடப்பாடி அணியினர்களை உற்று நோக்க வைத்துள்ளது. கடந்த முறை மாதிரி இந்த முறையும் முதல்வருக்கான ஆதரவு வாபஸ் என்று கூறினால் கவர்னர் கண்டிப்பாக இது உங்கள் உட்கட்சி விஷயம் நான் தலையிட முடியாது என்று தான் கூறுவார்



 
 
எனவே இன்றைய சந்திப்பின்போது ஆட்சிக்கு வாபஸ் என தினகரன் அதிரடியாக கவர்னரிடம் கோரிக்கையாக வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரை மாற்றினாலும் புதிய முதல்வர் தனக்கு விசுவாசமாக இருப்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதால் ஆட்சியை கலைத்துவிட்டு, தனக்கு ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த அதிரடி சற்றும் எதிர்பார்க்காதது என்பதால் எடப்பாடி அணி அதிர்ச்சியில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தினகரன் இந்த முடிவை எடுத்தால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் ஆபத்தும் உள்ளது என்பதால் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்