சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

Siva

வெள்ளி, 28 ஜூன் 2024 (15:23 IST)
சென்னை கோயம்பேட்டில் தலைமறைவாகி கட்டுமான பணி செய்து வந்த தீவிரவாதி அனோவரை மேற்குவங்க போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அனோவர் மீது உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறதுஇ.

இவருக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான 'அன்சார் அல் இஸ்லாம்' என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் செய்து அங்கிருந்து தப்பித்து சென்னை வந்த அனோவர் என்பவர் இங்கு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து வருவதாக கூறப்பட்டது.

இது குறித்த தகவல் அடைந்த மேற்குவங்க போலீசார் அதிரடியாக சென்னைக்கு வந்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை சுற்றி வளைத்து கதிரடியாக கைது செய்தனர்/ கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அப்பாவியாக ஒரு கட்டிட தொழிலாளியாக பணி செய்து கொண்டிருந்தவர் ஒரு தீவிரவாதியா என்று அவருடன் பணி செய்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்