ஜூலை 3 வரை தமிழகத்தில் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Siva

வெள்ளி, 28 ஜூன் 2024 (07:25 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் ஜூலை மூன்றாம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து தற்போது தென்மேற்கு பருவ மழை காலம் நடந்து வரும் நிலையில் ஜூன் மாதம் முழுவதுமே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்ற நிலையில் அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
 
அதாவது ஜூலை மூன்றாம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் வெப்ப ஓரளவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இனி கன மழை இல்லை என்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஜூலை ஒன்றாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்