ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் ... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (16:51 IST)
ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் ... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் தற்போதைய நிலவரப்படி 35  பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நேற்று ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டின் நுழைவாயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டுயளித்தார். இதற்கு ராஜேந்திரபாலாஜி, ரஜினியின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், “டெல்லி கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம். மேலும் உளவுத்துறை சரியாக செயல்பாடததும் காரணம்.
 
இது போன்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும், வன்முறையை அடைக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்” என கூறியிருந்தார். இதற்கு நேற்று கமல்ஹாசன் தனது பாராட்டுகள் தெரிவித்தார்.
 
இந்நிலையில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினியின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, மதக் கலவரத்தை தூண்டுவோரை இரும்புக் கதவு கொண்டு அடக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது முதல் தற்போது வரை கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்