நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது! என்ன காரணம்?

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:16 IST)
நாகர்கோவிலை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் என்பவர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர் தர்மராஜ் என்பவர் நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருடன் கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயலாளர் சொக்கலிங்கம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியதை அடுத்து இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் உள்பட பலர் ஈடுபட்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 53 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்