ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று, புதுவையிலும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.