40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: தினகரன் நம்பிக்கை

சனி, 2 பிப்ரவரி 2019 (22:17 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி இறுதியாகிவிடும் என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி ஒருபுறமும், திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்னொரு புறமும் தயாராகி வரும் நிலையில் தினகரன் ஒரு தனி கூட்டணியை உருவாக்கி வருகிறார். அவரது கூட்டணியில் ஒருசில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுக - பாஜக, திமுக-காங்கிரஸ் கூட்டணிகளை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும், அமமுகவுக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்கு பிறகு மாற்றியும் பேசும் கட்சியாக திமுக இருக்கும் என்பதால் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்