மத்திய பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளிய முதல்வர் எடப்பாடி ... கூட்டணிக்கு அச்சாரமோ...?

வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (20:32 IST)
ஒட்டுமொத்த பாரதநாட்டு மக்களும் எதிர்பார்த்த மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று  தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் பற்றி  இன்று காலை முதல் பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் எடப்பாயி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது,
 
நாட்டில் அனைவருக்கும்  வீடு வழங்கும் திட்டம் என்பது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம்ஒய்வூதியம் அளிக்கும் திட்டமும்  மக்களிடம் வரவேற்பு பெரும். 
 
2. 5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக வருமான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது மாத வருவாய் பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
தற்போது வட்டியில்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. டெல்டா மாவட்ட மக்களுக்கு சம்பா தொகுப்பு திட்டம் நடவு போன்றவற்றிற்கு மானியம் வழங்குகிறோம். மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் நிலை பற்றி தெரிந்துகொண்டு கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்க முடியும். 
 
பலர் இந்த பட்ஜெட்டை விமர்சிக்கிறார்கள்... ஆனால் மக்கள் நலனுக்காகத்தான் அரசு உள்ளது. இதில் எதுவுமே அறிவிக்கவில்லை உப்பு சப்பில்லாத பட்ஜெட் என்று விமர்சிப்பார்கள். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பல நலத்திட்டங்களை வரவேற்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்