திமுக கூட்டணிக்கு பாமக அழைக்கப்படாதது ஏன்? ஸ்டாலினின் புது கணக்கு

சனி, 2 பிப்ரவரி 2019 (09:30 IST)
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைய பாமக தரப்பில் தூது விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதற்கு காரணமாக திமுக தலைவருக்கு கிடைத்த மைக்ரோ டேட்டா என்று கூறப்படுகிறது. பாமக செல்வாக்காக இருக்கும் வட மாவட்டங்களில் திமுகவின் பலம் அதிகரித்திருப்பதாகவும் அதனால் பாமகவை விட வலிமையாக திமுக வடமாவட்டங்களில் இருக்கும்போது அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்து கொண்டு வடமாவட்ட தொகுதிகளை பாமகவுக்கு ஏன் தாரை வார்க்க வேண்டும்? என்பதே மு.க.ஸ்டாலினின் பார்வையாக உள்ளதாம். மேலும் பாமகவுக்கு வட மாவட்டங்களை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் செல்வாக்கு இல்லை என்பதால் பாமகவை கூட்டணியில் இணைப்பதால் திமுகவுக்கு எந்த லாபமும் இல்லை என்பதே திமுக தலைவரின் புதுக்கணக்காக உள்ளது.
 
மேலும் முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை விட அன்புமணிதான் பொருத்தமானவர் என்று பாமகவினர்களின்  பரப்புரையை திமுக ரசிக்கவில்லை என்பதும் இந்த கூட்டணி ஏற்படாமல் இருக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.
 
எனவே பாமகவுக்கு அதிமுக-பாஜக கூட்டணியை விட்டால் வேறு வழியே இல்லை என்பதுதான் தற்போதைய நிலை என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்