ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (05:07 IST)
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனயில் சிகிச்சை பெற்றபோது அம்மா இட்லி சாப்பிடுகிறார், இடியாப்பம் சாப்பிடுகிறார் டிவி பார்க்கின்றார் என்று சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் கூறியநிலையில் ஜெயலலிதாவை நாங்கள் சிகிச்சையின்போது பார்க்கவே இல்லை, பார்த்ததாக பொய் சொன்னோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



 
 
நேற்று இரவு மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'மக்களிடம் இப்போது ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.  ஜெயலலிதாவை நாங்கள் யாரும் மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை. எங்களை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை, அனைத்தும் விசாரணை கமிஷனில் தெரியவரும்'' என்று அதிரடியாக பேசினார்.
 
இதன் மூலம் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவருமே அந்த சமயத்தில் பொய்தான் பேசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதல் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்