ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தயார்: அமைச்சர் பெரிய கருப்பன்..

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (11:42 IST)
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய தயார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 
 
தக்காளி விலை கடந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தக்காளி உள்பட காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்தால் நியாய விலை கடைகளில் காய்கறி விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 
 
மேலும் பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்